விஜய் ஆண்டனி அப்பாவும் தற்கொலைதான் செய்து கொண்டாரா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,September 19 2023]

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது அப்பாவும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதை அவரே கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திரைப்பட விழா ஒன்றில் விஜய் ஆண்டனி பேசியபோது ’தற்கொலை என்பது தீர்வு இல்லை, எந்த கஷ்டம் வந்தாலும் தற்கொலை மற்றும் செய்து கொள்ளக்கூடாது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசும்போது ’என்னுடைய தந்தை தற்கொலை செய்து கொண்டார். அப்போது எனக்கு ஏழு வயது, என் தங்கைக்கு 5 வயது. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது என்னுடைய பர்சனல் விஷயம், இருப்பினும் அது ஒரு பெரிய விஷயம் இல்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால் என் அப்பா தற்கொலைக்கு அப்புறம் என்னுடைய அம்மா இரண்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி கஷ்டப்பட்டார் என்பதை நான் நேரில் பார்த்தேன், அந்த வலி எனக்கு மிக அதிகம். நான் அமைதியாக இருக்கிறேன், அழுத்தமாக இருக்கிறேன், சரியாக பேச மாட்டேன் என்றால், அதற்கு இதுதான் காரணம்.

எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும், நிறைய அனுபவித்து விட்டேன், நிறைய பேரை பார்த்து விட்டேன், நான் ஒன்னும் பேச தெரியாமல் அமைதியாக இல்லை, பேச தெரியும், ஆனால் பேசி என்ன பயன் என்று தான் அமைதியாக இருக்கிறேன்’ என்று கூறினார்.

வாழ்க்கையில் ஒருவருக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதீர்கள் என்று விஜய் ஆண்டனி மற்றவர்களுக்கு அறிவுரை கூறிய நிலையில் அவருடைய மகளே இன்று தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

பாரதிராஜா படத்தில் அறிமுகமான ஹீரோ திடீர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகம் செய்த ஹீரோ நடிகர் இன்று காலமானதாக செய்திகள் வெளியாகி உள்ளதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

டிடிஎஃப் வாசன் அதிரடி கைது.. லைசென்ஸை ரத்து செய்யப்படுமா? பரபரப்பு தகவல்..!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஹீலிங் செய்ய முயன்றார்.

விக்னேஷ் சிவனுக்கு டேட்ஸ் கொடுத்த பிரபலம்.. வைரல் வீடியோ..!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்க இருந்த படம் உருவாக இருந்த நிலையில், திடீரென அந்த படம் டிராப் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஜோதிகாவுக்கும் மிர்ச்சி செந்திலுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? இருவரையும் இயக்கும் பிரபல நடிகர்..!

நடிகை ஜோதிகா மற்றும் நடிகை மிர்ச்சி செந்தில் ஆகிய இருவரும் ஒரே ஆண்டில் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்ற தகவலை மிர்ச்சி செந்தில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நான் தொடங்கினால் என்னால் நிறுத்த முடியாது.. கணவருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய நயன்தாரா..!

நான் தொடங்கினால் என்னால் நிறுத்த முடியாது என்று தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா பதிவு செய்துள்ளார்.