விஜய் ஆண்டனி படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்ட ஆர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி, நடிகர் சரத்குமார் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’மழை பிடிக்காத மனிதன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டைட்டில் லுக் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
கோவா, டாயு, டைமன் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெற்று உள்ளது என்பதும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி நண்பராக சரத்குமார் நடித்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் தனஞ்ஜெயன் மற்றும் பிருத்வி அம்பார் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் தான் கேப்டன் விஜயகாந்த் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்தியை விஜயகாந்த் குடும்பத்தினர் மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy to share #MazhaiPidikathaManithan #MPM #மழைபிடிக்காதமனிதன் Title Look. Looking very good ????
— Arya (@arya_offl) February 14, 2022
Best wishes
?? @vijaymilton@vijayantony @r_sarath_kumar @meghaakash #SaranyaPonvannan @sharma_murli @dhananjaya_ka @pruthvi_ambaar_official
@infinitifilmventures @ctcmediaboy pic.twitter.com/kWEjvv3FP5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments