விஜய் ஆண்டனியின் அடுத்த பட டைட்டில்.. மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இதன் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் அந்த சோகத்தையும் பொருட்படுத்தாமல் தனது இளைய மகளுடன் நேற்று தான் நடித்த ’ரத்தம்’ என்ற படத்தின் புரமோஷன் விழாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் உடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு படக்குழுவினர் ’ஹிட்லர்’ என்ற டைட்டிலை வைத்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் ஆண்டனியுடன் ரியா சுமன், கௌதம் மேனன், சரண்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். தனா இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)