இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? விஜய் ஆண்டனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில், சற்று முன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், அந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பது மட்டும் தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடித்த ஹிட்லர் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அவர் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சற்று முன் அவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில், படத்தின் டைட்டில் ’ககன மார்கன்’ என்று கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தை லியோ ஜான்பால் என்பவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் வித்தியாசமாக இருப்பதாக கருத்து தெரிவித்தாலும், ’ககன மார்கன்’ என்பதற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விஜய் ஆண்டனி விளக்கமளிப்பாரா அல்லது படம் பார்த்தபின் தான் புரியுமா என்பது தெரியவில்லை. இருப்பினும், விஜய் ஆண்டனியின் இந்த புதிய படம் வித்தியாசமான ஒன்றாக இருக்கும் என இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிகிறது.