close
Choose your channels

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தை வாங்கிய ரெட் ஜெயண்ட் நிறுவனம்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Monday, January 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த அடுத்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது ’அக்னி சிறகுகள்’ ’ஹிட்லர்’ ’காக்கி’ ’ரோமியோ’ மற்றும் ’வள்ளி மயில்’ ஆகிய ஐந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் ’ரோமியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குட் டெவில் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக மிருணாளினி ரவி நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’ரோமியோ’ திரைப்படத்தின் தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய போஸ்டரை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சமீபத்தில் ’சிங்கப்பூர் சலூன்’ என்ற திரைப்படத்தை ரிலீஸ் செய்த நிலையில் அடுத்ததாக ’லால் சலாம்’ உள்பட ஒருசில படங்களை வெளியிடவுள்ளது. மேலும் இந்நிறுவனம் கமல்ஹாசன் நடித்துவரும் ’இந்தியன் 2’ மற்றும் ’தக்ஃலை’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment