விஜய் ஆண்டனியின் 'எமன்' தமிழக வசூல் எவ்வளவு?

  • IndiaGlitz, [Monday,February 27 2017]

விஜய் ஆண்டனி நடித்த 'எமன்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் கடந்த வார சென்னை வசூல் ஒரு கோடி ரூபாயை தாண்டியது என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தமிழக வசூல் குறித்து தற்போது பார்ப்போம்
இந்த படம் தமிழகத்தில் ரூ.8 கோடி வசூலாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் ரூ.1.05 கோடியும், செங்கல்பட்டு பகுதியில் ரூ.2.2 கோடியும், கோவையில் ரூ.1.6 கோடியும், நெல்லை-குமரி பகுதியில் 22 லட்சமும், திருச்சி-தஞ்சாவூர் பகுதியில் ரூ.56 லட்சமும் வசூலாகியுள்ளது.
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் நடிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.