விஜய் ஆண்டனியின் எமன்: பாசிட்டிவ் விமர்சனமும் தமிழக அரசின் வரிவிலக்கு...
- IndiaGlitz, [Friday,February 24 2017]
விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் இன்று அவர் நடித்த அடுத்தபடமான 'எமன்' உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகின்றது.
வெளிநாடுகளில் இந்த படத்தை பார்த்தவர்கள் சற்று முன்னர் பாசிட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருவதால் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இந்த படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைத்துள்ள செய்தியும் வந்துள்ளது. இந்த தகவல் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இனிப்பான செய்திதான் என்பது குறிப்பிடத்தக்கது.
லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ் முக்கிய வேடத்திலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அரசியல்வாதி கேரக்டரில் தியாகராஜனும் நடித்துள்ளனர். இந்த படத்தின் விமர்சனத்தை இன்னும் சில நிமிடங்களில் காணலாம்.