முதலிரவில் சரக்கு ஊற்றி கொடுக்கும் மிருணாளினி .. விஜய் ஆண்டனியுடன் மொரட்டு ரொமான்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதலிரவில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி உட்கார்ந்து இருக்கும் நிலையில் கணவருக்கு சரக்கு ஊத்தி தரும் காட்சி உள்ளதை பார்த்து விஜய் ஆண்டனி அதிர்ச்சி அடைவது போல் உள்ளது.
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது ’ரோமியோ’ உள்பட ஐந்து படங்களில் நடித்து வரும் நிலையில் ’ரோமியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வந்த நிலையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் முதலிரவு அறையில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி உட்காந்திருக்கிறார்கள். அதில் மிருணாளினி சரக்கு ஊற்றும் காட்சியும் அதை பார்த்து விஜய் ஆண்டனி அதிர்ச்சி அடைவது போல் உள்ளது. பாலும் விஸ்கியும் கொண்ட மொரட்டு ரொமான்ஸ் என்ற கேப்ஷனோடு வித்தியாசமாக உள்ள இந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
குட் டெவில் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரத் தனசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வினாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார்.
மொரட்டு romance🥃🌹
— vijayantony (@vijayantony) January 30, 2024
Milk and Whiskey❤️#BLOCKBUSTER this summer🔥#ROMEO@vijayantonyfilm @RedGiantMovies_ @mirnaliniravi @actorvinayak_v @prorekha @gobeatroute pic.twitter.com/9zOPZpfbq3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com