close
Choose your channels

ஏண்டா ரிவ்யூ பண்ற பொறுக்கிங்களா, தலைவர் படத்தையே குறை சொல்வியா? 'ரத்தம்' டிரைலர்..!

Saturday, September 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் டைட்டிலில் இருப்பது போலவே ஒரே ரத்தமாக உள்ளது. ஒரு சமூகப் பிரச்சனைக்காக களத்தில் இறங்கும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது டீமை காவல்துறையினர் எப்படி பிடிக்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

இன்றைய காலகட்டத்தில் டிரெண்டில் உள்ள சமூக வலைதளங்கள், அதன் மூலம் ஏற்படும் குற்றங்கள், அரசியல்வாதிகளின் முறைகேடுகள், காவல்துறையினர் அவர்களுக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட அனைத்தும் இந்த படத்தின் கதையில் இயக்குனர் சிஎஸ் அமுதன் இணைத்துள்ளார்.

விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்துக்கு கண்ணன் நாராயணன் என்பவர் இசையமைத்துள்ளார். அமர்நாத் ஒளிப்பதிவில் சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படம் நிச்சயம் விஜய் ஆண்டனி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment