சி.எஸ்.அமுதன் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்: மீண்டும் 'ஸ்ஃபுப்' படமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
’தமிழ்ப்படம்’ மற்றும் ’தமிழ் படம் 2.0’ ஆகிய இரண்டு ‘ஸ்ஃபுப்’ படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன், இரண்டு படங்களையும் வெற்றி படமாக்கினார் என்பதும் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களுக்கும் மாபெரும் வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது தொலைக்காட்சிகளில் இந்த படங்களை பார்த்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது சி.எஸ்.அமுதன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த படம் ‘ஸ்ஃபுப்’படம் இல்லை என்றும் இது ஒரு திரில்லிங் படம் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறிய இயக்குனர் சி.எஸ்.அமுதன், ‘திரில்லிங் படம் எடுப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றும் ஆனால் ’தமிழ் படம்’ ’தமிழ் படம் 2.0’ ஆகிய இரண்டு படங்களையும் காமெடிக்காக இயக்கினேன் என்றும் தனது அடுத்த படம் ஒரு கிரைம் திரில்லர் என்றும் இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி தன்னுடன் லயோலா கல்லூரியில் படித்தவர் என்றும் அவர் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தபோது நான் பிசிக்ஸ் படித்தேன் என்றும் அப்போது முதல் எங்களுக்கு நல்ல நட்பு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ’நாக்க முக்கா’ என்ற திரைப்படத்தில் நாங்கள் இருவரும் இணைய இருந்தோம் என்றும் ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் தொடங்கப்படவில்லை என்றும் ஆனால் தற்போது மீண்டும் நாங்கள் இணைந்துள்ளோம் என்றும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறியுள்ளார்
தமிழ்ப்படம் 2.0’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் அமர்நாத், இசை அமைப்பாளர் கண்ணன், படத்தொகுப்பாளர் சுரேஷ், சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இந்த படத்திலும் பணிபுரியவுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார்.
இந்த படம் குறித்து விஜய் ஆண்டனி கூறியபோது, ‘Infiniti Film Ventures நிறுவனத்துடன் மூன்றாவது முறையாக இணைவது, பெருமையாக உள்ளது. Infiniti Film Ventures நிறுவன தயாரிப்பாளர்கள் தரமிகுந்த, கொண்டாட்டமான படைப்புகளை தேர்ந்தெடுத்து செய்பவர்கள். கோடியில் ஒருவன் மற்றும் காக்கி படங்கள் மூலம் அது உறுதியாகியுள்ளது.
இயக்குநர் CS அமுதன் என்னிடம் இக்கதையினை சொன்ன போது முற்றிலும் வாயடைத்து போனேன். தமிழ் படங்களின் குறைபாடுகளை கிண்டலடிலடிக்கும், ஸ்பூஃப் வகை படங்களிலிருந்து முற்றிலும் வேறாக ஒரு திரில்லர் கதையை அவர் படைத்திருந்தார். இக்கதையை அவர் கூறும்போது அவர் முழுதுமாக ஒளிர்ந்துகொண்டிருந்தார். அவர் கதையுடன் அந்தளவு ஒன்றியிருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு மிகச்சிறந்த திரில்லர் இயக்குநராக அவர் கொண்டாடப்படுவார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com