close
Choose your channels

முடிவுக்கு வந்தது விஜய் ஆண்டனியின் அடுத்த படம்!

Friday, December 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் மாறிமாறி நடைபெற்று வந்த நிலையில் தற்போது ’தமிழரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

’தமிழரசன்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் போது எடுத்த புகைப்படத்தை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, படப்பிடிப்பு முடிவடைந்ததை உறுதி செய்துள்ளனர். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தின் புரமோஷன் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கும் இந்த படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், அரவிந்த் ஆகாஷ், யோகிபாபு, பாண்டியராஜன், பிக்பாஸ் புகழ் கஸ்தூரி, மதுமிதா, சென்றாயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர் எஸ்எம்எஸ் மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை பாபுயோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment