வழக்கம்போல் முதல் 5 நிமிட காட்சிகள்.. விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,October 03 2023]

விஜய் ஆண்டனி நடிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் உருவான ‘ரத்தம்’ என்ற திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த சில படங்களின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்த நிலையில் தற்போது ‘ரத்தம்’ படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சி வெளியாகியுள்ளது.

இந்த காட்சியில் தன்னுடைய தலைவனை பற்றி தவறாக எழுதியதற்காக வானம் என்ற பத்திரிகையை அலுவலகத்திற்குள் புகுந்து ஒரு குடிகாரன், பத்திரிகையாளரை கொலை செய்கிறான். இதனை அடுத்து நடக்கும் காட்சிகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. முதல் ஐந்து நிமிட காட்சியை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படமும் திரில் கதை அம்சம் கொண்ட ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். சிஎஸ் அமுதன், ஏற்கனவே ’தமிழ்ப்படம்’, ’தமிழ்ப்படம் 2’ என இரண்டு ஜாலியான படங்களை இயக்கிய நிலையில் தற்போது இந்த படத்தை திரில் கதையம்சம் கொண்டதாக இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.