மூளைமாற்று அறுவை சிகிச்சை கதையா? 'பிச்சைக்காரன் 2' படத்தின் டிரைலர்..!
- IndiaGlitz, [Friday,February 10 2023]
விஜய் ஆண்டனி நடித்த இயக்கியுள்ள ’பிச்சைக்காரன் 2’ படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் இன்று ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது.
அதில் மூளை மாற்ற அறுவை சிகிச்சையால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இரண்டு கேரக்டர்கள் பேசுவது போன்ற காட்சி உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நான்கு நிமிடமே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளதால் இந்த படம் நிச்சயம் விஜய் ஆண்டனியின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்து உள்ள இந்த படத்தை அவரே படத்தொகுப்பும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி, யோகிபாபு, காவ்யா தபார், ஜான் விஜய், ஒய்ஜி மகேந்திரா உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.