விஜய் குருமூர்த்தி.. ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன்: 'பிச்சைக்காரன் 2' டிரைலர்

  • IndiaGlitz, [Saturday,April 29 2023]

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம், இந்த நிலையில் இந்த படம் மே 19ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

விஜய் குருமூர்த்தி என்ற ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரரான தொழிலதிபர் கேரக்டரில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவரை அழிப்பதற்காக எதிரிகள் செய்யும் சதிகளை அவர் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது.

‘பிச்சைக்காரன்’ முதல் பாகம் போலவே இந்த இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனி, காவியா தபார், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், யோகிபாபு, ஹரிஷ் பெராடி, ஜான் விஜய் உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து, இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்பும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சியில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சமந்தா அந்தரத்தில் பறந்து ஆக்சன் காட்சிகளில் நடித்த காட்சிகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது. 

கமல் சார்கிட்ட ஆட தெரியாதுன்னு பொய் சொல்லி அடி வாங்குனேன் - சுலக்ச்சனா

தமிழில் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுலக்ச்சனா. இவர் தான் தன்னுடைய இரண்டரை வயதில் இருந்து நடித்து வருகிறார்.

'ஆதிபுருஷ்' படத்தில் சீதை கேரக்டர்.. பிரபல நடிகையின் மாஸ் போஸ்டர்..!

பிரபாஸ் நடித்து வரும் 'ஆதிபுருஷ்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் சீதையாக நடித்து வரும் கீர்த்தி சனோன் மாஸ் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில்

'பொன்னியின் செல்வன் 2' முதல் நாளே இத்தனை கோடி வசூலா? ஆச்சரியத்தில் திரையுலகினர்..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்த

நானோ, அமிதாப்போ செய்தால் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: ரஜினிகாந்த் பேச்சு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் என்டி ராமராவ் உடனான தனது நட்பு