'பிச்சைக்காரன் 2' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் ஆண்டனி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தமிழில் மட்டுமின்றி இந்த படம் தெலுங்கில் டப் செய்து சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் 6 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமான ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் முக்கிய அப்டேட்டை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருவதாகவும் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகத்தை பிரபல இயக்குனர் சசி இயக்கி இந்த நிலையில் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ANTIBIKILI ??#Pichaikkaran2 #Bichagadu2 #Bhikshuka2 #Bhikshakkaran2
— vijayantony (@vijayantony) December 20, 2022
Satellite & Digital rights acquired by Star Network ??
Summer 2023 ??@vijaytelevision @StarMaa @asianet @StarSuvarna @DisneyPlusHS @mrsvijayantony @vijayantonyfilm @DoneChannel1 @gskmedia_pr @gobeatroute pic.twitter.com/w0YPShC1xy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments