ரிலீசுக்கு தயாரான விஜய் ஆண்டனியின் அடுத்த படம்.. புதிய போஸ்டருடன் முக்கிய அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ என்ற திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அவர் ஐந்து படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை விஜய் மில்டன் இயக்கி வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஒரு சில வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டதாக கூறப்பட்டது.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இந்த படத்தின் டீசர் வரும் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றுடன் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசரில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் தான் ஒரு முக்கிய கேரக்டரில் விஜயகாந்தை நடிக்க வைக்க முயற்சி செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர் உடல் நலமின்றி இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதை அடுத்து ’கோட்’ திரைப்படத்திற்கு முன்பு ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் கேரக்டரை உருவாக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த முயற்சியும் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
விஜய் ஆண்டனி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார் மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள் என்பதும் இந்த படம் விஜய் ஆண்டனியின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#MazhaiPidikkathaManithan #மழைபிடிக்காதமனிதன்
— vijayantony (@vijayantony) May 20, 2024
My next after ‘Romeo’ #MPM is gearing up for the Release. #MPMTeaser from 29th May.
🎬 @vijaymilton@realsarathkumar #Sathyaraj @akash_megha #SaranyaPonvannan @murlisharma72 @Dhananjayang @AmbarPruthvi @FvInfiniti @DoneChannel1… pic.twitter.com/h46P8A6K6U
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com