அடுத்தடுத்து இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய் ஆண்டனி.. என்னென்ன படங்கள்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடித்த 'மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் ரிலீஸ் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய அவதாரங்களில் ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் டிரைலர் ஜூன் 29ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான இன்னொரு திரைப்படம் ’ஹிட்லர்’. இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில், டானா இயக்கத்தில், விவேக் மெர்வின் இசையில் உருவாகிய இந்த படம் விஜய் ஆண்டனியின் வெற்றி படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
When the Justice and System Fails, a Hero is Born to Fight 💥#Hitler is coming to theatres this August in Tamil, Telugu, Kannada, Malayalam & Hindi Worldwide 🎬#HitlerFromAugust@vijayantony @ChendurFilm @td_rajha @dir_rvs @Dhana236 @menongautham @iriyasuman @actorvivekpra pic.twitter.com/y85GD9Ru0A
— Chendur Film International (@ChendurFilm) June 27, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments