இவனுங்க எல்லாம் ஜெயிச்சுட்டு என்னத்த புடுங்குவாங்க: 'கோடியில் ஒருவன்' டிரைலர்

  • IndiaGlitz, [Friday,April 02 2021]

விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’கோடியில் ஒருவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் ஹீரோ விஜய் ஆண்டனிக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்று தெரியவருகிறது. மிகவும் மோசமாக பின்தங்கி இருக்கும் ஒரு பகுதியை முன்னேற விடாமல் தடுத்து கொண்டிருக்கும் ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளை எதிர்த்து போராடி, அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக வரும் விஜய் ஆண்டனி சந்திக்கும் பிரச்சினைகள்தான் இந்த படத்தின் கதை என்று டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

’இவனுக எல்லாம் ஜெயிச்சுட்டு வந்து என்னத்தை புடுவாங்கன்னு தெரியுமே’ என ஆவேசமாக விஜய் ஆண்டனி பேசும் காட்சியும், விஜய் ஆண்டனிக்கு எதிராக வில்லன்கள் சவால்விடும் காட்சியும், சிங்கப்பூரா மாத்துரேன், குட்டி ஜப்பானா மாத்துரேன்னு அரசியல்வாதிங்க இந்த நாட்டையே குட்டிச்சுவரா மாத்தியிருக்காங்க, எல்லாம் பிராடு பசங்க’ என்ற வசனத்துடன் முடியும் இந்த டிரைலரை பார்க்கும்போது தேர்தல் நேரத்தில் மிகச் சரியான ஒரு படம் என்றும் தெரியவருகிறது.

மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய இந்த படம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை, உதயகுமாரின் அசத்தலான ஒளிப்பதிவு, விஜய் ஆண்டனியின் படத்தொகுப்பு உள்பட அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.