விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’கோடியில் ஒருவன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த படத்தின் டிரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இதனை அடுத்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மே 14ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரம்ஜான் தினத்தில் இந்த படம் வெளியாக இருப்பதால் இந்த படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடித்து உள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும், இந்த படத்தின் எடிட்டிங் பணியையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Hi friends ??, see you in cinemas worldwide on May 1️⃣4️⃣ #KodiyilOruvan ????
— vijayantony (@vijayantony) April 16, 2021
?? @akananda@im_aathmika @nsuthay @nivaskprasanna @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/OZsV8R1ypB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com