விஜய் ஆண்டனியின் 'அண்ணாதுரை' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ், சென்சார் என அனைத்து பணிகளும் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் சென்சாரில் 'யூ/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் 128 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 8 நிமிடங்கள் ஓடும் வகையில் உள்ளது. ஒரு த்ரில் படத்திற்கு தேவையான சரியான நீளத்தை இந்த படம் கொண்டிருப்பதாக தெரிகிறது.

அண்ணாதுரை, தம்பிதுரை என இரு கேரக்டர்களில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்த படத்தில் டயானா, மஹிமா, ராதாரவி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தில்ராஜ் ஒளிப்பதிவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பு பணியும் புரிந்துள்ளனர். இந்த படத்தை ராதிகா சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

 

More News

இயக்குனர் சசிகுமாரையாவது காப்பாற்றுங்கள்: காவல்துறைக்கு வைகோ வேண்டுகோள்

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இயக்குனர் சசிகுமாரையாவது கந்துவட்டிக்காரர்களிடம் இருந்து காவல்துறை பாதுகாக்க வேண்டும் என்று வைகோ பேசியுள்ளார்.

கில்லி முதல் மெர்சல் வரை: தளபதி விஜய்யின் வசூல் வளர்ச்சி

தளபதி விஜய் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வின்னர் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். அவருடைய படங்களின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் ஓப்பனிங் வசூல் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருப்பதே அவரது மேஜிக்.

தீபா ரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்கிய தேர்தல் ஆணையம்

அதிமுகவின் அதிகாரபூர்வமான இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி, சசிகலா-தினகரன் அணி, தீபா அணி என மூன்று அணிகள் உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம்

அன்புச்செழியனுக்கு ஆதரவாக விஜய் ஆண்டனி

இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மரணத்தை அடுத்து கோலிவுட் திரையுலகில் பலர் அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிலையில் ஒருசிலர் அன்புச்செழியனுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணிக்கே என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியுள்ளது.