மலேசியாவில் விபத்து.. மேஜர் ஆபரேசன்: இப்போது எப்படி இருக்கிறார் விஜய் ஆண்டனி?

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

மலேசியாவில் ’பிச்சைக்காரன் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்த போது விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி தற்போது எப்படி இருக்கிறார் என்பதை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றது.

மலேசியாவில் மின்சார படகில் விஜய் ஆண்டனி செல்லும் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அவர் சென்ற மின்சார படகு விபத்துக்கு உள்ளானது. இதனை அடுத்து அவருக்கு படுகாயம் அடைந்த நிலையில் அவர் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சென்னை திரும்பி அவர் தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மலேசியாவில் ’பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடந்த போது தனக்கு மூக்கு மற்றும் தாடையில் காயம் ஏற்பட்டதாகவும் அதற்காக ஒரு மேஜர் ஆபரேஷன் செய்து முடித்துள்ளதாகவும் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் உங்கள் எல்லோரையும் வீடியோ மூலம் சந்திக்கிறேன், எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் ஆண்டனி தான் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய் ஆண்டனி விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

More News

ஆஸ்கார் விருதை நெருங்கிய 'ஆர்.ஆர்.ஆர்' : வாழ்த்து தெரிவித்த இசைப்புயல்

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்'  திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருதை நெருங்கி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் படக்குழுவினர்களுக்கு

நடிகர் ஆனந்த்ராஜ் மகன், மகளை பார்த்திருக்கிங்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

தமிழ் திரை உலகின் பிரபல வில்லன் மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஆனந்தராஜ் என்பதும் இவர் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

'வலிமை' பட நடிகர், பிக்பாஸ் போட்டியாளர்: 'குக் வித் கோமாளி சீசன் 4 குக்குகள் லிஸ்ட்!

அஜித் நடித்த 'வலிமை' பட நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளர் ஆகியோர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

த்ரிஷாவின் 'ராங்கி' உள்பட இந்த வார ஓடிடி ரிலிஸ் படங்கள்: முழு விபரங்கள்

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ஓடிடியிலும் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

'வாரிசு' வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்த 'துணிவு' விநியோகிஸ்தர்: வைரல் வீடியோ

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் தல அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களுமே