'பிச்சைக்காரன்' பட பாடலில் சர்ச்சைக்குரிய கருத்து. டாக்டர்கள் சங்கம் கண்டனம்

  • IndiaGlitz, [Tuesday,January 19 2016]

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'பிச்சைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் பாடலில் வரும் வரிகள் ஒன்று தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த படத்தின் ஒரு பாடலில் " கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்... தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் வருகின்றது. இந்த வரிகளுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கண்டன அறிக்கை ஒன்றை வெளீயிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் 'இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளதாகவும் இதுபோன்ற கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி, விஷமத்தனமானது என்றும் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர்கள் ஆனவர்களால், நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது இத்திரைப்படக் குழுவினரின் வக்கிரமான சாதி மேலாதிக்க உணர்வைத்தான் பிரதிபலிக்கிறது என்றும் "கோட்டாவில் சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்" எனவும், "சாகடிக்கிறான்" என்றும் ஒருமையில் கூறுவது சாதி மேலாதிக்க வெறியை வெளிப்படுத்துவதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தத் திரைப்படக் குழுவினர் மீது, குறிப்பாக பாடல் ஆசிரியர் லோகன், இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குநர் சசி ஆகியோர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும், ஒடுக்கப்பட்டோரை இழிவுப்படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்

More News

லைகா-ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' ஆகிய பிரமாண்டமான படங்களை தயாரித்த 'லைகா புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் அடுத்து ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ஒன்றை தயாரித்து வருவதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்....

பூஜையுடன் தொடங்கியது 'விஜய் 60' படத்தின் இசையமைப்பு

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் அவரது 60வது படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது.....

'24' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் சமந்தாவுக்கும் சுவாரஸ்ய ஒற்றுமை

சூர்யா, சமந்தா நடிப்பில் விக்ரம்குமார் இயக்கியுள்ள '24' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

அஜித்-சிறுத்தை சிவா கூட்டணியில் மீண்டும் இணையும் பிரபல நடிகை

'வேதாளம்' என்ற வெற்றி படத்தை அடுத்து அறுவை சிகிச்சை செய்து தல அஜீத் ஓய்வு எடுத்து கொண்டிருந்தாலும் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வந்து கொண்டே இருக்கின்றது. ...

'கெத்து' தமிழ் வார்த்தைதான். ஆதாரத்துடன் கூறும் உதயநிதி

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் 'கெத்து' திரைப்படம் சென்சார் அதிகாரிகளால் 'யூ' சர்டிபிகேட் பெற்றிருந்தும் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கவில்லை....