தமிழில் நான் கண்டுபிடித்த 'பிகிலி' என்ற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்: விஜய் ஆண்டனி விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,March 17 2023]

விஜய் ஆண்டனி நடித்த இயக்கி உள்ள ’பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன்களில் ‘பிகிலி’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதை கேள்விப்பட்டிருப்போம். ‘பிகிலி’ என்பதற்கு என்ன அர்த்தம்? தமிழில் இப்படி ஒரு வார்த்தையை இல்லையே என்று பலர் குழப்பத்தில் இருக்கும் நிலையில் தற்போது ‘பிகிலி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பதை வீடியோ ஒன்றின் மூலம் விஜய் ஆண்டனி விளக்கியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

நம் தமிழை வளர்ப்பதற்காக என்னால் முடிந்த ஒரு கெட்ட வார்த்தையை கண்டுபிடித்து இருக்கிறேன். கெட்ட வார்த்தை என்றால் நீங்கள் நினைக்கிற மாதிரி பேசுபவர்களுக்கு அசிங்கமாக இருக்காது, இந்த வார்த்தையை கேட்கிறவனுக்கு மட்டும்தான் அசிங்கமாக இருக்கும். நான் கண்டுபிடித்த அந்த கெட்ட வார்த்தை பெயர் ‘பிகிலி’

ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் இருந்து பணத்தை சுரண்டி, அவர்களை அடிமையாக்கி பண திமிரில் தலைவிரித்தாடும் நபரின் பெயர் தான் ‘பிகிலி’. ஏழைகள் பலர் கஷ்டப்பட்டு உழைத்த போதிலும் முன்னேற முடியாமல் இருப்பதற்கு காரணம் இந்த பிகிலி தான். இவர்களை அழிக்க முடியாது என்றாலும் ‘பிகிலி’ என்ற வார்த்தையின் மூலம் இவர்களை அடையாளப்படுத்தலாம். இன்று முதல் நான் கண்டுபிடித்த ‘பிகிலி’ என்ற வார்த்தை தமிழ்நாட்டில் வைரலாகும்’ என்று தெரிவித்து இந்த படத்தின் மியூசிக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

விஜய் ஆண்டனி இயக்கிய இசையமைத்து உள்ளதோடு அவரே படத்தொகுப்பு செய்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, காவியா தபார், ஜான் விஜய், ஒய்ஜி மகேந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.