விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,May 03 2019]

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளியான அந்த படத்தின் புரமோஷன் வீடியோவில் ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது

இதன்படி 'கொலைகாரன்' திரைப்படம் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படமான 'கொலைகாரன்' படத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கியுள்ளார். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரதீப் தயாரித்துள்ளார்.

More News

திடீர் என நடுரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் ரசிகர்கள்!

மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர், திடீர் என விஜய்யின் பேனர் ஒன்றை வைத்து, பாலபிஷேகம் செய்து, கீழே விழுந்து கும்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்...

த்ரிஷா பிறந்த நாளில் ஆரம்பமாகும் 'பரமபத விளையாட்டு'

தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் கதாநாயகியாக தாக்குப்பிடிப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாதனை. கடந்த 1999ஆம் ஆண்டு 'ஜோடி' படத்தில் அறிமுகமான த்ரிஷா 20 வருடங்கள் கழித்து

பணிந்தது பெப்சி: உருளைக்கிழங்கு வழக்கை வாபஸ் பெற முடிவு!

9 விவசாயிகளிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த அமெரிக்காவை சேர்ந்த பெப்சி நிறுவனம் அந்த வழக்கை வாபஸ் பெற ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

கரையை கடக்க துவங்கியது ஃபானி: பலத்த காற்றுடன் கனமழை 

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று ஒடிஷாவில் கரையை கடக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் ஒடிசாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே ஃபோனி புயல்

ஆபாச படமெடுத்து மிரட்டிய ரெளடி கும்பல்: என்கவுண்டரில் போட்டு தள்ளிய போலீஸ்

சேலத்தில் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்த ரெளடியை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது