அது முற்றிலும் பொய்.. அந்த சகோதரி மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன்: விஜய் ஆண்டனி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னை பற்றி வதந்தி பரப்பிய சகோதரி மீது வாழ நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என் மீது அன்பு கொண்ட என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன் இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். ஒரு சகோதரி யூடியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏஆர் ரஹ்மான் அவர்களையும் தொடர்புபடுத்தி பொய்யான வதந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே.
அந்த யூடியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும் நலிவடைந்த இசை துறையின் நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அது முற்றிலும் பொய்யே! pic.twitter.com/x7sRGOu4tu
— vijayantony (@vijayantony) September 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments