எப்பவுமே ஒரு பயம் இருக்கும்.. ஆனா இப்ப அது இல்லை.. 'மழை பிடிக்காத மனிதன்' டீசர்..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த டீசரின் ஆரம்பத்தில் ’சில உயிர்கள் அர்ப்பமானவை என்னும் எண்ணமே உலகின் அனைத்து தீமைக்குமான விதை ’ என்ற டைட்டில் உடன் ஆரம்பிக்கிறது. மேலும் ’எப்போதுமே ஒரு பயம் இருக்கும், ஆனால் இப்ப அது இல்லை, கோவிலுக்கு போய் தூங்குனா நிம்மதியா இருக்கும் இல்ல, கண்ணுக்கு தெரியாத ஒருத்தன் எப்பவுமே கூட இருக்கிற மாதிரி ஒரு தைரியம், அதை கொடுத்தது நீங்கதான், நீங்க தானே’ என்று மேகா ஆகாஷ் பேசும் வசனத்துடன் இந்த டீசர் ஆரம்பமாகிறது.

அதன் பின் விஜய் ஆண்டனியின் அதிரடி ஆக்சன் காட்சிகள், சத்யராஜின் வித்தியாசமான கெட்டப் காட்சிகள் ஆகியவற்றுடன் இருக்கும் இந்த ’மழை பிடிக்காத மனிதன்’ டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கி உள்ளார். அச்சு ராஜா ணி மற்றும் விஜய் ஆண்டனி இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் புரமோஷன் பணிகள் தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.