விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன் படத்தில் இணைந்த பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ’தமிழ் படம்’ ’தமிழ் படம் 2’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன், தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ’ரத்தம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்லவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பதும் அவர்கள் ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மகிமா நம்பியார் என்றும் மூன்று ஹீரோயின்களுக்கும் சம அளவில் அவர்களுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக இயக்குனர் சி.எஸ். அமுதன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல பாடகர் தெருக்குரல் அறிவு ஒரு பாடல் பாடி இருப்பதாக சி.எஸ். அமுதன்தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் அறிவார்ந்த ஆழம், அனுபவம் மற்றும் கலைத்திறனை அவர் கொண்டு வருவதாகவும் தெருக்குரல் அறிவுக்கு இயக்குனர் சி.எஸ். அமுதன்புகழாரம் சூட்டி உள்ளார். மேலும் அவர் தனது படத்தில் ஒரு பாடலை பாடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வலிமை, அண்ணாத்த, மாநாடு, எனிமி, மாறன் உள்பட பல பிரபலங்களின் படங்களில் பாடிய பாடகர் தெருக்குரல் அறிவு தற்போது விஜய் ஆண்டனி - சி.எஸ். அமுதன் படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Had the pleasure of recording a song with the freakishly talented @TherukuralArivu . He brings an explosive combination of intellectual depth, lived experience & virtuosu artistry to every song. We are lucky to have him. #Ratham @vijayantony @FvInfiniti pic.twitter.com/PEzNMnouXd
— CS Amudhan (@csamudhan) January 28, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments