விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த நடித்து வரும் படங்களில் ஒன்று ‘கோடியில் ஒருவன்’ என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று ரிலீசுக்கு தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் கடந்த மே மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை ’கோடியில் ஒருவன்’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என நேற்றே தகவல்கள் இந்த நிலையில் சற்று முன்னர் செப்டம்பர் 17ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

‘மெட்ரோ’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் என்பதும் இந்த படத்தின் எடிட்டிங் பணியை விஜய் ஆண்டனி கவனித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் பட ரிலீஸ் தேதி இதுவா?

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், சூர்யா மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறது

இதைவிட பெஸ்ட் பிறந்த நாள் எனக்கு இல்லை: விஷால் வீடியோ வைரல்

பிரபல நடிகர் விஷால் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு உலகெங்கிலுமிருந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை அடுத்து நன்றி கூறி

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த தனுஷ்- நயன்தாரா பட நடிகர்!

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் மற்றும் நயன்தாரா படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ள

அரசியல் செய்யாமல் ஆட்சி செய்கிறீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் பாராட்டு!

அரசியல் செய்யாமல் ஆட்சி செய்கிறீர்கள் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல நடிகர் ஒருவர் பாராட்டு தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓபிஎஸ் அவர்களின் மனைவி சற்று முன் காலமானதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது