'பிச்சைக்காரன் 1' - ரூ.500, 1000.. 'பிச்சைக்காரன் 2' - ரூ.2000: நெட்டிசன்களின் மீம்ஸ் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு சில வாரங்களில் ரூபாயை 500 மற்றும் 1000 செல்லாது என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் நேற்று ’பிச்சைக்காரன் 2’ வெளியாகி உள்ள நிலையில் ரூ.2000 நோட்டு திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை அடுத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்
விஜய் ஆண்டனி நடித்த ’பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் 'நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற வசனம் இருந்தது. இந்த படம் வெளியான ஒரு சில நாட்களில் ரூபாய் 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பலர் இந்த படத்தையும் , பணமதிப்பிழைப்பு நடவடிக்கையும் இணைத்து மீம்ஸ்களை பதிவு செய்தனர்.
அதேபோல் நேற்று ’பிச்சைக்காரன் 2’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் நேற்று இரவு ரூபாய் 2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் செப்டமொபர் 30க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2000 ரூபாய் நோட்டுகளை ஒருவர் ஒரே நேரத்தில் 10 எண்ணிக்கையிலான நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிலையில் ’பிச்சைக்காரன்’ படம் வரும்போது எல்லாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் வருகிறது என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருவது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout