விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!! தவெக முதல் மாநாடு தேதியை அறிவித்த விஜய்..!

  • IndiaGlitz, [Friday,September 20 2024]

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு நடைபெறும் புதிய தேதியை அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கை தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களை பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நமது வெற்றி கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களை தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்! இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன். விரைவில் சந்திப்போம்!! வாகை சூடுவோம்!!

இவ்வாறு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

More News

ப்ரியங்கா பற்றி இப்படி பேசுறதுக்கு, மணிமேகலை பொறுப்பு எடுத்துக்கணும்... ரவீந்தர்

தமிழ் நாட்டின் நிகழ்கால பிரச்னைகளைவிட, நடிகர் விஜயின் மாநாடு குறித்த செய்திகளை விட இப்போது தமிழக மக்களிடம் கருத்து கேட்கும் அளவிற்கு...

மணிமேகலை - பிரியங்கா விவகாரத்தில் நடந்தது என்ன? குரேஷி வெளியிட்ட வீடியோ..!

கடந்த சில நாட்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் நான்காவது படம் மற்றும் அவர் நடிக்கும் 52வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,

ஜீ டிவி சீரியலில் இணையும் பிரபல நடிகரின் மகள்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள்..!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரின் மகள் ஜீ டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க இருப்பதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது.. தலைமறைவாகியிருந்தது எங்கே? அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது