விஜய் அண்ணாவுக்கும் எனக்கும் உள்ள நெருக்கத்தை ஒருவர் மட்டுமே அறிவார். சிம்பு
Tuesday, June 7, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'இது நம்ம ஆளு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உற்சாகமாகவுள்ள சிம்பு, அடுத்த பட வேலையை விரைவில் தொடங்கவுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமூக இணையதளத்தில் சுவாரஸ்யமாக பதில் அளித்தார். அவற்றில் விஜய் குறித்து சிம்பு கூறிய ஒரு பதில் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
தான் ஒரு தல' ரசிகன் என்பதால் தனக்கும் விஜய்க்கும் நெருக்கமில்லை என்று பலர் நினைத்து வருகின்றனர். ஆனால் உண்மையில் தான் சிறுவயதில் இருந்தபோதில் இருந்தே விஜய்யை தனக்கு நன்கு தெரியும் என்றும் தங்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை யார் அறிவோர்களோ இல்லையோ விஜய் அண்ணா நன்கு அறிவார் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments