close
Choose your channels

'தளபதி 65' படத்திலும் தொடரும் காமெடி காம்போ!

Monday, February 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் இரண்டே வாரங்களில் 200 கோடி வசூல் செய்ததை அடுத்து தற்போது ஓடிடியிலும் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது

இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யுடன் மீண்டும் யோகிபாபு நடிக்க உள்ளார். ஏற்கனவே ’சர்கார்’ ’மெர்சல்’ படத்தில் நடித்த விஜய்-யோகிபாபு காமெடி காம்போ ஒர்க் அவுட் ஆன நிலையில் தற்போது அதே போல் மீண்டும் அதே காம்போ உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த காம்போவில் விடிவி கணேஷும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய ’கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபு கேரக்டருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த படத்திலும் அவருடைய கேரக்டருக்கு அதேபோன்ற வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment