'தளபதி 64': எளிமையான பூஜையில் விஜய்-விஜய்சேதுபதி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 64’ படத்தின் பூஜை இன்று நடைபெறும் என வெளிவந்த செய்தியை நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதன்படி சற்று முன்னர் சென்னையில் ’தளபதி 64’ பட பூஜை எளிமையாக நடைபெற்றது
இந்த பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், சாந்தனு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சிவா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இன்று எளிமையாக இந்த படத்தின் பூஜை நடந்து முடிந்ததை அடுத்து அடுத்த வாரம் ஆயுத பூஜை முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்காக தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் விஜய் கால்சீட் கொடுத்து உள்ளதாகவும் தனது வழக்கமான கொள்கைகள் சிலவற்றை தகர்த்து, இந்த படத்திற்காக கூடுதலான நேரம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அவர் சம்மதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிவடைந்து அடுத்த வருடம் ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
With all your Goodwill and Blessings #Thalapathy64 shoot begins. #Thalapathy64Pooja@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @imKBRshanthnu @Jagadishbliss @gopiprasannaa @Lalit_SevenScr @sathyaDP @philoedit @silvastunt @SonyMusicSouth pic.twitter.com/MDSkzgDTiT
— XB Film Creators (@XBFilmCreators) October 3, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com