'தளபதி 64' படத்தில் த்ரிஷாவா? ராஷ்மிகாவா? படக்குழுவினர் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,June 01 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படமான 'தளபதி 63' படத்தை அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இந்த விலையில் 'தளபதி 64' படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இருவரும் இணைந்து நடித்த 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி' போன்ற படங்கள் ஹிட்டானதால் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதேபோல் 'தளபதி 63' விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என கருதப்பட்டு கடைசி நேரத்தில் நூலிழையில் வாய்ப்பை இழந்தவர் ராஷ்மிகா மந்தனா. எனவே இவர்தான் விஜய்யின் அடுத்த படத்தின் நாயகி என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த படக்குழுவினர், 'லோகேஷ் தற்போது 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். அதேபோல் விஜய், 'தளபதி 63' படத்தில் பிசியாக உள்ளார். இருவரும் தங்களது படத்தை முடித்தபின்னர் கலந்து பேசி, நாயகி யார்? என்பதை முடிவு செய்வார்கள். இந்த படத்திற்கு இதுவரை நாயகி யாரும் பரிசீலிக்கப்படவில்லை. இதுகுறித்து வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் அனைத்தும் வதந்தியே என்று கூறியுள்ளனர்.

More News

தமிழ் நடிகைக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்ப பெறப்பட்டதால் பரபரப்பு

நடிகையும் கடந்த 2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவருமான மீரா மிதுன் சமீபத்தில் தான் சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்த அழகிப்போட்டியை தடுத்து நிறுத்த சிலர் திட்டமிடுவதாகவும்,

முடிந்தவரை மூடியிருக்கின்றேன்: அட்வைஸ் செய்த 'அண்ணா'வுக்கு நடிகை பதில்

'ஹாப்பி வெட்டிங்', 'மேட்ச் பாக்ஸ்' போன்ற படங்களில் நடித்தவர் பிரபல மலையாள திரிஷ்யா ரகுநாத்.

காதலருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்வது ஒன்றும் புதிதில்லை. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் கணவன், மனைவியாகிய பாலஜி-நித்யா கலந்து கொண்டனர்.

பிரபல நடிகரை புகைப்படம் எடுக்க மறுத்த பத்திரிகையாளர்கள்!

நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் , சமீபத்தில் தனிப்பட்ட வகையில் சொந்த பணியில் இருந்தபோது ஒரு பத்திரிகையாளர் புகைப்படம் எடுத்திருந்தார்.

இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் கருத்து!

புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழி, ஆங்கிலத்தை அடுத்து மூன்றாவது மொழியாக இந்தி மொழி பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து ஊடகங்களில் மாறுபட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது