வேற லெவல் ஹேர்ஸ்டைலில் விஜய்.. ஆங்கிலோ இந்திய பெண் போல் த்ரிஷா.. 'லியோ' லேட்டஸ்ட் ஸ்டில்..!

  • IndiaGlitz, [Sunday,February 26 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் விஜய் மற்றும் த்ரிஷா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.

ஜீரோ டிகிரி செல்சியஸ் கடும் குளிரிலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் திட்டமிட்டபடி காஷ்மீர் படபிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க படக்குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் சற்றுமுன் விஜய், த்ரிஷா செம ஸ்டைலில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதில் விஜய்யின் வித்தியாசமான ஹேர்ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. அதேபோல் ஆங்கிலோ இந்திய பெண் போல் த்ரிஷா வித்தியாசமான உடையிலும் தோற்றத்திலும் உள்ளார். இந்த புகைப்படங்கள் ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் ’லியோ’ படத்தில் நடித்து வருகின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.