தளபதி விஜய் மற்றும் சூர்யா திடீர் சந்திப்பா?

  • IndiaGlitz, [Wednesday,November 10 2021]

சன் நெட்வொர்க் அலுவலகத்தில் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே.

இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் அதாவது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்றும், அதேபோல் விஜய்யின் ’பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சன் நெட்வொர்க் அலுவலகத்தில் நேற்று விஜய் மற்றும் சூர்யா வந்து இருந்தனர் என்றும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டு நலம் விசாரித்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.