விஜய்யுடன் எனது நட்பு எப்படி? மனம் திறக்கும் சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய்யும் நடிகர் சூர்யாவும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நட்புடன் இருந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரது படங்களும் சிலசமயம் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி தொழில் ரீதியில் போட்டியாளர்களாக தெரிந்தாலும் இருவருடைய நட்பும் இறுக்கமானது என்பதை சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இருந்து தெரிய வருகிறது.
'விஜய்யுடன் ஆன எனது நட்பு இன்றளவும் நெருக்கமாகத்தான் உள்ளது. அதுமட்டுமின்றி சங்கீதா, ஷாலினி மற்றும் ஜோதிகா ஆகியோர்களும் எங்களை போலவே ஒருவருக்கொருவர் நெருக்கமான நட்பை கொண்டுள்ளனர்.
சமீபத்தில் விஜய் தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடியபோது நாங்களும் அந்த விழாவில் கலந்து கொண்டோம். எப்பொழுது நான் விஜய் படங்களை ரசித்தாலும் உடனே அவருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பி எனது வாழ்த்துக்களை தெரிவிப்பேன். நாங்கள் இருவருமே இப்போதுகூட எங்கள் கல்லூரிகால நண்பர்களுடனும் தொடர்பில் இருக்கின்றோம்' என்று சூர்யா விஜய்யுடன் ஆன தனது நட்பு குறித்து கூறியுள்ளார்.
சூர்யா நடித்த முதல் படமே விஜய் நடித்த 'நேருக்கு நேர்' என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரும் நண்பர்களாக 'ப்ரெண்ட்ஸ்' படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments