பாசத்துடன் தோளில் கைபோட்ட விஜய்.. மாணவியின் எதிர்பாராத ரியாக்சன்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் இன்று 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தி பொன்னாடை போர்த்தி பரிசுகளையும் வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய நிலையில் முதலில் மாணவ மாணவிகள் மத்தியில் உரையாற்றிய விஜய் அதன் பிறகு ஒவ்வொரு மாணவியாக அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு பத்திரம், பரிசு பொருளும் வழங்கினார். மேலும் மாணவர் அல்லது மாணவியின் தோளில் கை போட்டு புகைப்படங்களுக்கும் போஸ் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவி ஒருவர் விஜய்யிடம் பரிசு பெற வந்த போது அந்த மாணவிக்கு விஜய் பொன்னாடை போர்த்தி பாராட்டு பத்திரத்தையும் பரிசு பணத்தையும் வழங்கினார். அதன்பின்னர் அவருடைய தோளில் விஜய் கை போட்டு போஸ் கொடுத்த போது, அந்த மாணவி தோளில் இருந்து விஜய்யின் கையை எடுத்து, தனது கையுடன் கை கோர்த்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். மாணவியின் இந்த அன்பான நெகிழ்ச்சியான செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதே போல அடுத்ததாக இன்னொரு மாணவி வந்த போது அந்த மாணவிக்கு பொன்னாடை விஜய் போர்த்த முயற்சித்தபோது, அந்த மாணவி தனது தந்தைக்கு பொன்னாடை போர்த்துமாறு கூறினார், ஆனால் அவரது தந்தையோ தனது மகளுக்கு பொன்னாடை போர்த்த கூறினார். சிறிது நேரம் குழப்பம் அடைந்த விஜய் அதன் பிறகு மாணவிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout