ஒரே நாளில் மோதும் விஜய்-சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

விஜய் நடித்து வரும் ’லியோ’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 21’ ஆகிய இரண்டு படங்களின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகிறது

இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜுன் பிறந்த நாள் என்பதால் அவரது கேரக்டர் குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ’மாவீரன்’ வெற்றியை அடுத்து ’எஸ்கே 21’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் போஸ்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே விஜய்யின் ’லியோ’ மற்றும் சிவகார்த்திகேயனின் ’எஸ்கே 21’ ஆகிய இரண்டு படங்களின் அப்டேட்டுகள் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்பதால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா பிரபல நடிகரின் படம்?

வரும் தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' கார்த்தி நடித்த 'ஜப்பான்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக

திடீரென சன் டிவி அலுவலகம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. என்ன காரணம்..?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் சன் டிவி அலுவலகம் சென்றதாக

சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம்.. பிரபல நடிகரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..!

பிரபல நடிகர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற நிலையில் திடீரென அவரது மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆரம்பித்த இடத்திலேயே முடிந்தது..'லால் சலாம்' படப்பிடிப்பு குறித்து ஐஸ்வர்யா ரஜினியின் நெகிழ்ச்சியான பதிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இடத்திலேயே முடிந்தது என நெகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

'ஜெயிலர்' படம் குறித்து தனுஷ் ட்வீட்.. ரசிகர்களின் ரியாக்ஷன்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.