கெடுபிடிகள் அதிகரித்தும் விஜய்-ராஷ்மிகா ரொமான்ஸ் புகைப்படம் லீக்: அதிர்ச்சியில் 'வாரிசு' படக்குழு!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி படக்குழுவினர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் வம்சி, படக்குழுவினர் அனைவருக்கும் செல்போன் அனுமதி இல்லை என்று தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து இந்த படத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இனி லீக் ஆகாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது திடீரென மீண்டும் விஜய் மற்றும் ராஷ்மிகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது படக்குழுவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செல்போன்கள் அனுமதி இல்லை என்று கெடுபிடி அதிகரிக்கப்பட்டும் புகைப்படங்கள் எப்படி லீக் ஆகிறது என்று புரியாமல் இதுகுறித்த விசாரணையில் படக்குழு இறங்கியுள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகியுள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மிஷ்கினின் 'பிசாசு 2' ரிலீஸ் தள்ளி போகிறதா? புதிய ரிலீஸ் தேதி என்ன?

 மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்த  'பிசாசு 2' திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

ஒரு கூட்டம் என்னை 2-வது திருமணம் செய்ய சொல்கிறது: நடிகை மேக்னா ராஜ்

 ஒரு கூட்டம் என்னை இரண்டாவது திருமணம் செய்ய சொல்கிறது என்றும், இன்னொரு கூட்டம் குழந்தைக்காக வாழுங்கள் என்று சொல்கிறது என்றும் நடிகை மேக்னா ராஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'பீஸ்ட்' அரபிக்குத்து நடன இயக்குனருக்கு கிடைத்த சூப்பர் புரமோஷன்: குவியும் வாழ்த்துக்கள்

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பதும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணிபுரிந்தார் என்பது

மீண்டும் போலீஸ் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ்? ஹீரோ யார் தெரியுமா?

செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'சாணிக்காகிதம்' என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக . 

'வீரன் வேலுத்தம்பி' கேரக்டரில் நடிக்கும் விஜய்யின் ' வாரிசு ' நடிகர்!

தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் வீரன் வேலுத்தம்பி என்ற சுதந்திர போராட்ட வீரர் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.