இன்று 'வாரிசு' நாள்: விஜய், ராஷ்மிகாவின் புதிய போஸ்டர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள விஜய் ராஷ்மிகா போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில், தமன் இசையில், தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்ற ’ரஞ்சிதமே’ என்ற பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை தளபதி விஜய் மற்றும் சூப்பர்சிங்கர் புகழ் மானஸி பாடி உள்ளதாகவும் இந்த பாடலை விவேக் எழுதி உள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் ‘வாரிசு’ படத்தின் அட்டகாசமான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் மற்றும் ராஷ்மிகா இருக்கும் இந்த கலர்ஃபுல் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இன்று வாரிசு படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளதை அடுத்து சிங்கிள் பாடலும் வெளியாக இருப்பதால் இன்றைய நாள் சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ நாளாக கருதப்படுகிறது.
Let the countdown begin nanba ??#RanjithameFromToday 5:30 PM.
— Sri Venkateswara Creations (@SVC_official) November 5, 2022
??️ #Thalapathy @actorvijay sir & @manasimm
?? @MusicThaman
??️ @Lyricist_Vivek@directorvamshi @iamRashmika @AlwaysJani #BhushanKumar #KrishanKumar #ShivChanana @TSeries
#Ranjithame #Varisu #VarisuPongal pic.twitter.com/cQojtDDJFL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com