22 வருடங்களுக்கு முன்.. விஜய் - பிரியங்கா சோப்ரா மலரும் நினைவுகளை பதிவு செய்த பிரபலம்..!

  • IndiaGlitz, [Friday,July 19 2024]

நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய இசையில் அவர் முதன்முதலாக பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து உள்ளார்.

முன்னாள் உலக அழகி ஆன பிரியங்கா சோப்ரா விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நாயகியாக நடித்தது மட்டுமின்றி விஜய்யுடன் சேர்ந்து ’உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலையும் பாடினார் என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் டி இமான், ’தமிழன்’ படத்திற்காக விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா பாடிய போது எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

22 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பாடிய பாடலை கம்போஸ் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் டி இமான் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

இந்த போஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லை.. பீச் பேபியாக மாறிய கீர்த்தி பாண்டியன்..

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து பீச் பேபி என கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட் மற்றும் லைக் குவிந்து வருகிறது.

ஹேப்பி பர்த்டே கணவரே.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' நடிகைக்கு கல்யாணம் ஆயிருச்சா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே' என்று பதிவு செய்துள்ளதை

நடிகை மனைவியை விவாகரத்து செய்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்: உருக்கமான பதிவு..!

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டர் வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடிகை நடாஷாவை விவாகரத்து செய்யவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம்

துலாம் ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்க்கு அளித்த பேட்டியில், வரும் ஆறு மாதங்களுக்கான (ஆடி முதல் பங்குனி வரை) துலாம் ராசிக்கு ராசி பலன்களை விரிவாக கணித்துள்ளார்.

கன்னி ராசிக்கு ராசி பலன் ஆடி முதல் பங்குனி வரை -பிரபல வேத ஜோதிடர் பிரகாஷ் நரசிம்ஹன்

பிரபல ஜோதிடர் திரு. பிரகாஷ் நரசிம்ஹன் அவர்கள் யூடியூப் சேனல் ஆன்மீக கிளிக்ஸ்க்கு அளித்த பேட்டியில், வரும் ஆறு மாதங்களுக்கான (ஆடி முதல் பங்குனி வரை) கன்னி ராசி ஜாதகத்தை பற்றி விளக்கமாகக் கூறியுள்ளார்.