10 வருஷமா பேட்டி கொடுக்காதது ஏன்? நெல்சனிடம் மனம் திறந்த தளபதி விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் பத்தாண்டுகளுக்குப் பிறகு ’பீஸ்ட்’ படத்திற்காக சன் டிவியில் பேட்டி அளித்துள்ளார் என்பதும் அந்தப் பேட்டி வரும் பத்தாம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த பேட்டி குறித்த புரோமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சற்றுமுன் புதிய புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் 10 ஆண்டுகள் நீங்கள் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்ததற்கு ஏதாவது முக்கிய காரணம் இருக்கா? என்று நெல்சன் கேட்டபோது, ‘ஒரு பத்து வருடங்களுக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சி ஒன்று நடந்தது’ என்று அதனை விளக்குகிறார்.
அதன்பின் ரசிகர்களுக்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? என்று நெல்சன் கேட்டதற்கு ‘அட்வைஸ் பண்ணும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று சொல்லி நான் எஸ்கேப் ஆக விரும்பவில்லை’ என்று கூறி அதன் பின் ரசிகர்களுக்கு தனது அறிவுரை கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Rasigargalukku naan enna solla virumburen-na...
— Sun TV (@SunTV) April 5, 2022
-@actorvijay
Vijay-yudan Nerukku Ner | April 10 | 9 PM @Nelsondilpkumar #SunTV #VijayyudanNerukkuNer #VNNOnSunTV #ActorVijay #BeastSpecial #Beast pic.twitter.com/LQfDUsexni
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments