இந்த அதிசயம் நடக்குமா? ஒரே படத்தில் விஜய்-மகேஷ்பாபு

  • IndiaGlitz, [Sunday,July 03 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்களுக்கு இணையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகவுள்ள 'சங்கமித்ரா' என்ற படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்ததை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் கலை இயக்குனராக சாபுசிரில் என்றும், கிராபிக்ஸ் நிபுணராக கமலக்கண்ணன் என்றும் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார்? என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் பெரும் ஆவலில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகவுள்ள இந்த படத்தில் தமிழில் இளையதளபதி விஜய்யும், தெலுங்கில் பிரின்ஸ் மகேஷ்பாபுவும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதேபோல் இந்தியிலும் ஒரு பிரபல நடிகர் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் ஒரே படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பில் விஜய்யும் மகேஷ்பாபுவும் ஒரே நேரத்தில் நடிக்கும் அதிசயம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.