படப்பிடிப்பு முடியும் முன்பே இத்தனை கோடி பிசினஸ் ஆகிவிட்டதா 'லியோ'?  முழு விபரங்கள்..!

  • IndiaGlitz, [Sunday,February 26 2023]

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் இந்த படத்தின் பிசினஸ் சுமார் ரூ.400 கோடி அளவு ஆகிவிட்டதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு ‘லியோ’ படத்திற்கு உள்ளது என்பதும் 'மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்கள் என்பதும் ’விக்ரம்’ என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால் இந்த படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்பட்டது

அதனை நிரூபிப்பது தற்போது இந்த படத்தின் வியாபாரம் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் உத்தேச பிசினஸ் விவரங்கள் குறித்த தகவல் இதோ:

டிஜிட்டல் உரிமை நெட்பிளிக்ஸ்: 120 கோடி ( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்)

சாட்டிலைட் உரிமை சன் டிவி: ரூ.70 கோடி

ஆடியோ உரிமை: ரூ.18 கோடி

ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமை: ரூ.30 கோடி

ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமை; ரூ.50 கோடி

தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமை: ரூ.75 கோடி

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ரிலீஸ் உரிமை; ரூ.35 கோடி

வட இந்தியா ரிலீஸ் உரிமை: ரூ.35 கோடி

மேற்கண்ட உத்தேச பிசினஸ் தொகையை கூட்டினால் இந்த படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக பிசினஸ் நடக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.