'யோஹான்' டிராப் ஆகி 12 வருடங்கள்: மீண்டும் இணையும் விஜய்-கெளதம் மேனன்?

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருந்த ‘யோஹான் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படம் டிராப் ஆகி 12 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் தற்போது மீண்டும் விஜய், கௌதம் மேனன் ஒரு படத்தில் இணைய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த 2010ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம் ‘யோஹான் அத்தியாயம் ஒன்று. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங் கப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் ஆகியது

இந்த நிலையில் தற்போது 12 ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் நடிக்கும் ’தளபதி 67’ திரைப்படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் 6 வில்லன்கள் என்று கூறப்பட்ட நிலையில் அந்த ஆறு பேரில் ஒருவர் கௌதம் மேனன் என்று செய்திகள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே இந்த படத்தில் வில்லன்களாக சஞ்சய்தத், அர்ஜூன், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பட்டியலில் கௌதம் மேனன் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.