'பீஸ்ட்' விஜய்யா? 'பூவே உனக்காக' விஜய்யா?  காலம் தான் பதில் சொல்லும்: விஜய் பேட்டி 

’பீஸ்ட்’ விஜய் வேண்டுமா இல்லை 'பூவே உனக்காக’ விஜய் வேண்டுமா என்பதை காலம் நேரம் தான் முடிவு செய்யும் என விஜய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் பேட்டி வரும் 10ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .

விஜய்யை நெல்சன் எடுக்கும் இந்த பேட்டியின் புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சற்றுமுன் சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘பீஸ்ட்’ விஜய் வேண்டுமா அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும், இப்போது உங்களுக்கு எந்த விஜய் வேண்டும்? என்று நெல்சனிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் ’நீங்கள் புத்தாண்டு தீர்மானங்களை எடுப்பீர்களா? என்று நெல்சன் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே விஜய் பதிலளிக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.