close
Choose your channels

ஒரே படத்தில் விஜய்-தனுஷ்? பிரபல இயக்குனரின் முயற்சி பலிக்குமா?

Wednesday, July 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜய் நடிக்கும் படத்தில் நடிகர் தனுஷை இணைக்க பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முயற்சித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’லியோ’. இந்த படத்தில் ஏற்கனவே சஞ்சய்தத், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ளதால் இந்த படத்தை மல்டி ஸ்டார் படம் என்று கூறி வருகின்றனர்.

மேலும் ராம்சரண் தேஜா மற்றும் அனுராக் காஷ்யப் ஆகிய இருவரும் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் நடிக்காத நடிகர் தனுஷ் உடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment