அட்லியின் அலுவலகத்திற்கு விசிட் செய்த விஜய்? வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’தெறி’, ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி என்பதும் இந்த மூன்று படங்களும் சூப்பர்ஹிட் ஆகி வசூலை வாரிக்குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் திடீரென அட்லீ அலுவலகத்திற்கு சமீபத்தில் விஜய் தளபதி விஜய் சென்றதாகவும் அவருடைய அலுவலகத்தில் இருந்து அவர் வெளியே வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
ஏற்கனவே தளபதி விஜய்யின் 65வது படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் அட்லியின் அலுவலகத்திற்கு தளபதி விஜய் சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’தெறி’, ’மெர்சல்’ மற்றும் ’பிகில்’ ஆகிய மூன்று முறை இணைந்த விஜய்-அட்லி கூட்டணி 4வது முறையாக மீண்டும் இணையுமா? என்ற கேள்வியை இந்த வீடியோ எழுப்பி வருகிறது. இருப்பினும் இதுகுறித்து விஜய் மற்றும் அட்லீயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்தால் மட்டுமே மீண்டும் இணைவது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது என்பதும் அட்லியின் அடுத்த படத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தளபதி விஜய்யின் 66வது படத்தை அட்லி இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
EXCLUSIVE VIDEO !!
Thalapathy At Dir @Atlee_dir office!
Thalaivaaaaaaa ??#Master | @actorvijay#28YearsOfBelovedVIJAY pic.twitter.com/lkcz6wzcUO
— KERALA VIJAY FANS CLUB (@KVFC_OfficiaI) December 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com