ஹாட்ரிக் வெற்றிக்கு வித்திடுவார்களா விஜய்-முருகதாஸ்?

  • IndiaGlitz, [Thursday,July 09 2015]

இளையதளபதி விஜய் நடித்த 58வது படமான 'புலி' விரைவில் ரிலீஸாகவுள்ளது. அதேவேளையில் அவர் நடித்து வரும் 59வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் விஜய் 60" படத்தின் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


விஜய் 60" படத்தை துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக இணையதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் ஆசைப்படியே இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் 'அகிரா' படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும், விஜய் 59' படமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முடிவடையும் என்றும், அதன்பின்னர் இரண்டு ஸ்டார்களும் மூன்றாவது முறையாக இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியோ துப்பாக்கி, கத்தி படங்களை அடுத்து விஜய்-முருகதாஸ் கூட்டணி ஹாட்ரிக் வெற்றிக்கு வித்திடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'பாகுபலி' படத்தில் ரம்யா கிருஷ்ணனின் முதல் முயற்சி

ரம்யா கிருஷ்ணன் குரல் ஒலிக்கப் போகும் முதல் தெலுங்கு படம் ’பாகுபலி’

'விஜய் 59' படத்தில் இணைந்த 3-வது நாயகி

'புலி' படத்திற்கு பின்னர் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படம் குறித்து தினந்தோறும் ஒவ்வொரு தகவல்களாக பரபரப்புடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது...

ஊட்டியில் ஜெயம் ரவி-லட்சுமி மேனன் படப்பிடிப்பு

ஜெயம் ரவி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான 'ரோமியோ ஜூலியட்' சமீபத்தில் 25வது நாளை பூர்த்தி செய்தது. 'பேராண்மை' படத்திற்கு பின்னர் ...

எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி. ஒரு முன்னோட்டம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மன்னர் காலத்து கதை என்பது ஒரு புதுமையான விஷயம் இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே சரித்திரக் கதை திரைப்படங்களை பார்த்து...

'சிம்பு படத்துக்கு எதிராக சதி செய்வோர் திரையுலகைச் சேர்ந்தவர்களே' டி.ஆர். குற்றச்சாட்டு

நடிகர் சிலம்பரசன் நடித்து நீண்ட தாமதத்துக்குப் பின் ஜூலை 17 அன்றூ வெளியாவதாக அறிவ்க்கப்பட்ட ‘வாலு’ படத்துக்கு நேற்று வெளியான நீதிமன்ற...